வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (19:08 IST)

ஜியோவின்...;5ஜி ஸ்மார்ட் போன்,ஜியோ பிராண்ட் லேப்டாப் மாடல்கள்

இந்தியாவில் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ். இந்நிறுவனத்தில் 5ஜி ஸ்மார்ட் போன் மற்றும் ஜியோ பிராண்ட் லேப்டாப் மாடல்கள் குறித்த தகவல் வெளியாகிறது.

ரிலையன்ஸ்  நிறுவனம் இந்தியாவின் முதல் 5 ஜி ஸ்மார்ட் போன் ஜீயோபுக் என்ர பெயரில் குறைந்த விலை லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்வுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த ஆண்டு 5ஜி ஸ்மார்ட் போனுக்கான ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் உருவாகியுள்ள ஸ்மார்போன்கள் ஆண்ட்ராய்ட் அல்லது ஆண்டிராய்ட் கோ தளாத்தைச் சேர்ந்து இயங்கும் ஜியோ ஓஎஸ் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் கோ தளம் எண்ட்ரீ லெவல் ஹார்ட்வேர் கொண்ட ஸ்மார்ட் போன்களில் சீராக இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது..
மேலும், 5 ஜி ஸ்மார்ட் போனுடன் ஜியோ லேப்டாப் மாடலும் இந்த ஆண்டு அறிமுகம் ஆகும் எனக் கூறப்படுகிறது. இந்த லேப்டாபில் ஹெஸ்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசசர், 4ஜி மோடெம் அதிகபட்சம்  3ஜிபி ரேம் 64 மெமரி கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.