வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (09:56 IST)

தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடம் கோவையா? அதிர்ச்சி தகவல்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு 6 லஸ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுறுவி இருப்பதாக இன்று காலை உளவுத்துறை, தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று இரவு முழுவதும் தமிழகத்தின் பல பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்
 
 
இந்த நிலையில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவலை அடுத்து அந்த பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதனையடுத்து கோவை முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 
மேலும் கோவையில் ஊடுறுவிய 6 பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் மீதி  5 பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோவையில் ஊடுறுவியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க கோவை நகரம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருவதால் இன்னும் சிலமணி நேரங்களில் அவர்கள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது