1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2022 (16:00 IST)

2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்கும்: தமிழ்மகன் உசேன்

tamilmagan hussain
2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்கும்: தமிழ்மகன் உசேன்
2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்குமென அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்மகன் உசேன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது பொய் வழக்கு தொடரப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பிரார்த்தனை செய்தேன் என்றும் அதற்குப்பிறகுதான் ஜெயலலிதா விடுதலை அடைந்தார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் இணைந்து நடக்கும் என்றும் அப்போது நிச்சயம் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva