வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:38 IST)

அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு விண்ணப்பிக்க தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: புதிய உத்தரவு

surgery
உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் தமிழ் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மொத்தம் 1200 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமனம் செய்ய மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு செய்துள்ள நிலையில் பிற மாநிலத்தவர் அல்லது தமிழ் தெரியாதவர்களை தவிர்க்கும் வகையில் இந்த புதிய விதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
அறுவை சிகிச்சை போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran