திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (07:40 IST)

விஜய்க்கு வழிவிடுங்கள்: ரஜினி, கமலிடம் மறைமுக வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்து ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் இருவரும் ஆட்சி செய்தது போதும் என்று நினைக்கும்போது அவர்களது தம்பிகள் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் கமல் மட்டும் ரஜினிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
நேற்று ’கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனரும், தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகரன் அவர்கள் பேசியதாவது:
 
சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தவர்கள்தான் ஆட்சி செய்து வருகிறார்கள்
 
கமலஹாசன் துணிச்சலோடு அரசியலில் இறங்கிவிட்டார். இது சாதாரண விஷயம் இல்லை. அதே போல் ரஜினிகாந்த் அவர்களும் அரசியலுக்கு வேண்டுமென கோடானு கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். கமலஹாசனும் ரஜினிகாந்தும் சேர்ந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது, தமிழர்களுக்கு நல்லது
 
அரசியலில் பின்னால் இருந்து தாக்குபவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள். ஆனால் உங்கள் பின்னால் இருந்து பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் ஆண்டது போதும் என நினைத்த பிறகு உங்கள் தம்பிகள் வந்தால் அவர்களுக்கு வழிபடவேண்டும்’ என்று எஸ்ஏ சந்திரசேகர் பேசினார். தம்பிகளுக்கு வழிவிட வேண்டும் என்பதை அவர் விஜய்யை மறைமுகமாக குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்