வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (08:31 IST)

தாம்பரம் எனும் புது மாநகராட்சி உருவாக்கம்

பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. 

 
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் 20 ஆவது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது தாம்பரம்.
 
அதன்படி பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகளும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.