செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (21:24 IST)

ஹோட்டலுக்கு வெளியே இறைச்சியை வைக்கக் கூடாது – வதோதரா நகர நிர்வாகம்

ஹோட்டல்களில் முட்டை உள்ளிட்ட இறைச்சிகளை வெளியில் தெரியும்படி வைக்கக் கூடாது என குஜராத்தின் வதோதரா நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத்தின் வதோதரா நகர நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: வதோத்ரரா நகரில் உள்ள ஹோட்டல்களில்  முட்டை உள்ளிட்ட இறைச்சி உணவுகளை வெளியில் தெரியும்படி இனிமேல் வைக்க கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், இறைச்சியை வெளியில் வைப்பதால் உணவுகள் புண்படுகிறது என சேர்மன ஹிதேந்திர படேல் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது