ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (18:48 IST)

முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
நிவர் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி அருகே அதிதீவிவ புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளதால் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.    
 
இந்நிலையில் தற்போது மழையின் காரணமாக 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம். இதனிடையே எதிர்ப்பார்த்தப்படியே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது திறக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி இப்போது திறக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே ஏற்கனவே டையாறு ஆற்றங்கரையோர மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. தற்போது சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் செம்பரம்பாக்கத்தில் இருந்து நீர் திறக்கப்பட்டால் முடிச்சூரில் வெள்ளப்பெருக்கு அதிகமாகும் வாய்ப்புள்ளதாக மக்கள் பாதிகாப்பாக இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.