வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (16:30 IST)

மன நலத்தினை பேணி பாதுகாத்துகொள்ளுங்கள் சீமான்- ராஜேஸ்வரி பிரியா

rajeshwari priya
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சீமான் ''சிஎஸ்கே கிரிக்கெட் அணியில் 11 பேரில் தானும் ஒருவராக இருப்பேன்'' என்று கூறியிருந்தார். இதுகுறித்து, அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா ''சீமான் பேசி இருப்பது நகைச்சுவையை மட்டுமல்ல புரிதல் இல்லா ஒரு கூட்டம் அவர் பின்னால் இருப்பதனை எண்ணி வேதனையையும் தருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழ்நாட்டு அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழர் கூட இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்தவர்  ’நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் 11 பேரும் தமிழர்கள் தான் இருப்பார்கள் என்றும் நாமும் சேர்ந்து விளையாடுவோம் என்றும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தமிழர்கள் இல்லை என வருத்தப்பட வேண்டிய நிலை இருக்காது'' என்றும் அவர் தெரிவித்தார்.  

இந்த நிலையில், ''சிஎஸ்கே கிரிக்கெட் அணியில் 11 பேரில் தானும் ஒருவராக இருப்பேன் என்று சீமான் பேசி இருப்பது நகைச்சுவையை மட்டுமல்ல புரிதல் இல்லா ஒரு கூட்டம் அவர் பின்னால் இருப்பதனை எண்ணி வேதனையையும் தருகிறது'' என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''இளைஞர்களை தன்பக்கம் வசபடுத்த கண்டதை பேசி கட்சி் வளர்த்து வரும் திரு சீமான் அவர்கள் சிஎஸ்கே கிரிக்கெட் அணியில் 11 பேரில் தானும் ஒருவராக இருப்பேன் என்று பேசி இருப்பது நகைச்சுவையை மட்டுமல்ல புரிதல் இல்லா ஒரு கூட்டம் அவர் பின்னால் இருப்பதனை எண்ணி வேதனையையும் தருகிறது.
சீமான் அவர்களின் எண்ணம் “கல்யாண வீடா இருந்தா மாப்பிள்ளையா இருக்கனும் எழவு வீடா இருந்தா பிணமா இருக்கனும்” என்ற திரைப்பட வசனத்தினை நினைவூட்டுகிறது.
மன நலத்தினை பேணி பாதுகாத்துகொள்ளுங்கள் திரு சீமான் அவர்களே'' என்று தெரிவித்துள்ளார்.