ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2024 (15:24 IST)

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

Vijay
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  தெரிவித்தார். 
 
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 
இதற்கு விழுப்புரம் மாவட்ட காவல் துறையும் அனுமதி வழங்கி உள்ளது. 33 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கிய நிலையில் 17 நிபந்தனை நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் மாநாடு தொடர்பாக மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சென்னை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
 
அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்பட உள்ளதாக தெரிவித்தார். மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு ஒழுக்கத்தோடு வரவேண்டும் எனவும் அவர் கூறினார்.

 
மேலும் கட்சிக்கும், விஜய்க்கும் எந்த களங்கமும் ஏற்படாத வண்ணம் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டார்.