ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (13:26 IST)

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. இமெயில் ஐபி முகவரியை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்..

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரியை சுவிட்சர்லாந்து நாட்டின் தனியார் நிறுவனம் கண்டுபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு வெடிகுண்டு வைக்க போவதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து மிரட்டல் விடுத்தவரின் விவரத்தை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர முயற்சியில் இருந்தனர்

இந்த நிலையில் சுவிஸ் நாட்டை சேர்ந்த புரோட்டான் என்ற நிறுவனம் சென்னை காவல்துறைக்கு மிரட்டல் இமெயில் விடுத்த  நபரின் ஐபி முகவரியை கண்டுபிடித்து அதை சென்னை போலீசாருக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் இந்த விவரத்தை தர புரோட்டான் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாகவும் இதையடுத்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்திற்கு சென்னை போலீஸ் கடிதம் எழுதிய நிலையில் அதன் பின்னர்தான் புரோட்டான் நிறுவனம் இந்த தகவலை அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஐபி முகவரி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் மிரட்டல் விடுத்த நபர்  யார் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran