வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 22 மே 2021 (15:54 IST)

Swiggy,zomoto -நிறுவனங்கள் பார்சல் சேவையில் ஈடுபட அனுமதி

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்று தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளற்ற முழு ஊரடங்கு  அறிவித்துள்ளது.

அதில், மருந்துகள், நாட்டு மருந்தகங்கள், இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசர் பத்திரிக்கை அனுமதிக்கப்பட்டுள்ளது.

காயகறிகள் மற்றும் பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம வழங்கப்படும் என அறிவித்துள்ளது

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணிவரை மதியம் 12 -3 வரை மாலை – 6 இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்,. சுவீகி( Swiggy) , ஸோமோட்டோ( zomoto)  போன்ற நிறுவனங்கள் பார்சல் சேவையில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.