ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (14:06 IST)

இனி ரோட்டுக்கடை சாப்பாடும் ஆன்லைனில் கிடைக்கும்! – கை கோர்த்த ஸ்விகி!

ஆன்லைன் மூலமாக பிரபலமான உணவகங்களின் உணவுகள் டெலிவரி செய்யப்படுவது போலவே சாலையோரக்கடைகளின் உணவும் கிடைக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

பிரபலமான உணவகங்களின் உணவுகள் ஆன்லைனில் கிடைத்தாலும், அதன் விலை அதிகம், அளவு குறைவு போன்ற காரணங்களால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும்பாலும் சாலையோர உணவகங்களையே பெரிதும் விரும்புகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால் சாலையோர உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்காக ஸ்விகி நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது மத்திய அரசு

முதற்கட்டமாக டெல்லி, சென்னை அகமதாபாத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள சாலையோர உணவகங்கள் ஸ்விகியுடன் இணைந்து ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 5 லட்சம் சாலையோர உணவகங்கள் பயன்பெறுவதுடன், மக்களும் வீட்டிலிருந்தபடியே குறைந்த விலையில் உணவை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.