புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : சனி, 23 நவம்பர் 2019 (17:32 IST)

ஜெயலலிதா மீது சத்தியமாக ... நான் பொய் சொல்ல மாட்டேன் - செல்லூர் ராஜூ

முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா மீது சத்தியமாக நாங்கள் சொல்வதைத்தான் செய்கிறோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேற்கு,  தொகுதி பெத்தானிய புரத்தில், முதல்வரின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்   வழங்கினார்.
 
விழாவின் போது பேசிய அமைச்சர் கூறியதாவது;
 
எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பல்வேறு தொழில்கள் இருப்பதாகவும், இந்த அமைச்சர் பதவியை வைத்து சம்பாதிக்கவில்லை என தெரிவித்தார். 
 
மேலும், ஜெயலலிதா மீது சத்தியமாக நாங்கள் சொல்வதைச் செய்கிறோம். நான் பொய் சொல்ல மாட்டேன் என தெரிவித்தார்.