பேருந்து மோதியதில் நொறுங்கிப்போன கார்.. கோர விபத்தில் உயிரிழந்த புகைப்பட கலைஞர்கள்
மதுரையில் அரசுப் பேருந்தும், காரும் மோதியதில் 3 புகைப்பட கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை புளியங்குளம் அருகே எதிர்பாராதவிதமாக திருமங்கலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஒரு காருடன் மோதியது.
இந்த கோர விபத்தில் கார் நொறுங்கிப்போனது. மேலும் இந்த விபத்தில் காரில் பயணித்த 3 புகைப்பட கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.