சுவாதி படுகொலை சினிமாவாக எடுக்கப்படுகிறதா?: ஆடு மேய்ச்சவன் அருவா அழகான பொண்ணு
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி யார் என இன்னமும் உறுதியாக முடிவாகாத நிலையில் இந்த படுகொலை கதையை சினிமாவாக எடுக்கப்போவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்தை எடுக்கப்போவது மன்சூரலிகான் என பேசப்படுகிறது.
வில்லன் நடிகரான மன்சூரலிகான் தன்னுடைய மகனை நாயகனாக அறிமுகப்படுத்தி ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்கு “ஆடு மேய்ச்சவன் அருவா அழகான பொண்ணு” என கூறப்படுகிறது.
இந்த படம் சுவாதி படுகொலை தொடர்பான கதையை கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் ஆடு மேய்க்கும் பழக்கமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தலைப்பு சுவாதி படுகொலையை நினைவுப்படுத்தும் விதமாக இருப்பதால் இது அந்த கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து மன்சூரலிகானிடம் கேட்கப்பட்டபோது அவர் கதை குறித்து கூற மறுத்துவிட்டார்.