ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2024 (11:37 IST)

மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்.. 6 மாதம் மருத்துவ விடுப்பில் சென்றதாக தகவல்..!

Doctor
கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து ஆறு மாத காலம் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய பாலாஜி என்பவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய நிலையில், அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
 
இந்த நிலையில், மருத்துவர் பாலாஜி சிகிச்சையின் மூலம் படிப்படியாக தேறி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் முழுவதும் குணமாகிய நிலையில் டிச்சார்ஜ் செய்யப்பட்டார். 
 
மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவ குழு வலியுறுத்திய போதிலும், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அடுத்த 6 வார காலம், மருத்துவர் பாலாஜி மருத்துவ விடுப்பில் ஓய்வு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva