திடீரென உச்சம் செல்லும் பங்குச்சந்தை.. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு..!
பங்குச்சந்தை கடந்த வாரம் முழுவதும் சரிவில் இருந்தது என்பதும், நேற்று வாரத்தின் முதல் நாளும் சரிவில் தொடங்கிய நிலையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை ஆரம்பம் முதலே உச்சத்திற்கு சென்று வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 931 புள்ளிகள் உயர்ந்து 78,331 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 275 புள்ளிகள் உயர்ந்து 23,729 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் பெடரல் வங்கி, பெல் நிறுவனம், மணப்புரம் பைனான்ஸ், டைட்டான் கம்பெனி, டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, சன் நெட்வொர்க், கனரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல்கள் உள்ளன.
அதே போல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva