1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 24 ஜூன் 2017 (12:54 IST)

ஆதாரம் இருக்கிறது ; பண விவகாரத்தில் முறைகேடு செய்தவர் ரஜினி ; மீண்டும் சுப்பிரமணியசுவாமி

ரடிகர் ரஜினிகாந்த் பண விவகாரத்தில் முறைகேடு செய்தவர் எனவும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி விவாதிப்பதே தற்போது ஊடகங்களின் முக்கிய கருவாக இருக்கிறது. இந்நிலையில், தொடக்கத்திலிருந்தே ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி, சமீபத்தில் இந்தியா டுடே தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது, பண விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏராளமான முறைகேடுகளை செய்துள்ளார். அதற்கான தகுந்த ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. எனவே, அவர் அரசியலுக்கு வருவதற்கு தகுதியற்றவர். அவர் அரசியலுக்கு வரக்கூடாது என கருத்து தெரிவித்தார்.
 
அவர் சார்ந்துள்ள பாஜக கட்சியே, ரஜினியை தங்கள் வளையத்திற்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில், சுப்பிரமணிய சுவாமி, ரஜினிக்கு எதிராக இப்படி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.