மனைவி மீது சந்தேகம்...ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை...
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்த கணவன் மனைவி மீது சந்தேசகம் கொண்டார். இதனால் அவரது மனைவியும் 2 பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளசரவாக்கத்திலுள்ள ராயலா நகரில் வசித்து வந்த செந்தாமரை அரும்பாக்கத்தில் கம்பியூட்டர் விற்பனையகம் நடத்தி வருகிறார். இவர் மனைவி பெயர் அபிதா.
செந்தாமரை தன் மனைவி மீது அபிதா மீது சந்தேகப்பட்டார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டை வந்தது. இந்நிலையில் நேற்றிரவு கடையில் இருந்து தன் வீட்டிற்கு போனில் அழைத்துள்ளார். ஆனால் வீட்டிலிருந்து யாரும் போனை எடுக்கவில்லை. எனவே உடனடியாக தன் வீட்டிற்கு சென்றார். கதவும் தாழிடப்பட்டிருந்ததால் கதவை உடைந்துகொண்டு உள்ளே சென்றார்.
அப்போது மனைவி அபிதா மற்றும் இரண்டு பெண்கள் மகா லட்சுமி(7), மகன் லட்சுமி நாராயணன்(10) ஆகியோர் தூக்கில் சடலமாகக் தொங்கியுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் வீட்டிற்கு சென்று 3 பேரின் சடலத்தை மீட்டு ...செந்தாமரையிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன