செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (13:16 IST)

சுஷ்மா சுவராஜ் தி.நகரில் விரும்பி வாங்கிய பொருட்கள்: பாஜக நிர்வாகி உருக்கம்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சென்னை தி.நகரில் பல பொருட்களை விரும்பி வாங்கி மகிழ்ந்துள்ளார் என பாஜக பெண் நிர்வாகி ஒருவர் உருக்கமாக கூறியுள்ளார்.

சுஷ்மா சுவராஜ், பல அரசியல் பிரமுகர்களுடன் மிகவும் நெருங்கி பழகி வந்தவர். அவர் கட்சிக்கு எதிர்கொள்கையுடைய காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளில் உள்ள அரசியல் பிரமுகர்களிடமும் நட்பு ரீதியாக பழகி வந்தவர்.

சுஷ்மா சுவராஜ் கடந்த 2004 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சென்னை வந்தபோது, தமிழக பாஜக துணைத் தலைவராக இருந்த லலிதா சுபாஷிடம் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் சேர்ந்து சென்னையிலுள்ள தி.நகரில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அங்கே உணவு பொருட்களிலிருந்து துணிகள் வரை தனக்கு விரும்பிய அனைத்தையும் வாங்கி மகிழ்ந்துள்ளார்.

இது குறித்து லலிதா சுபாஷ், ”சுஷ்மா சுவராஜ் சென்னை வந்த போது இருவரும் சேர்ந்து பாண்டி பஜார், தி.நகர் ஆகிய இடங்களுக்குச் சென்று பல பொருட்கள் வாங்கினோம். சுஷ்மா, உணவு வகைகளிலிருந்து, துணி வகைகள் வரை அவருக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ந்தார். அதன் பின்பு நாங்கள் சென்னை கடற்கரைக்குச் சென்று கடலின் அழகை கண்டு ரசித்தோம். அந்த அளவுக்கு அவர் என்னுடன் எளிமையாக பழகினார் “ என உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் திமுக எம்.பி. திருச்சி சிவாவிடமும் சுஷ்மா சுவராஜ் நட்பாக பழகியுள்ளார். இது குறித்து அவர், கடந்த செவ்வாய்கிழமை, பாராளுமன்ற கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து டெல்லியில் உள்ள அவரது வீட்டிலேயே அவரை சந்தித்து வந்தேன். அன்று இரவே அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடந்தேன் என உருக்கமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.