வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 டிசம்பர் 2017 (18:41 IST)

ஆர்.கே.நகரில் களமிறங்குகிறார் விஷால்: திமுக, அதிமுக அதிர்ச்சி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இன்று இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளருமான விஷால் ஆர்கே நகர் இடைதேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார் என்றும், வரும் திங்கள் அன்று அவர் மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக களமிறங்கும் விஷாலுகு கமல் ஆதரவு தருவார் என்றும், அவர் அந்த தொகுதியில் விஷாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று தேவை என்று எண்ணும் பொதுமக்கள் விஷாலுக்கு ஓட்டு போட்டாலே அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. விஷாலின் இந்த திடீர் முடிவால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.