1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 டிசம்பர் 2017 (18:29 IST)

ஆர்.கே.நகரில் விஷால் போட்டி

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 
வரும் 21ஆம் தேதி நடைபெற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கமல்ஹாசன் ஆதரவுடன் நடிகர் விஷால் போட்டியிட உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. விஷால் போட்டியிடுவது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
 
விஷாலில் இந்த முடிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் வெற்றி வாய்ப்பு மிகவும் கடினம்தான் என தெரிவித்துள்ளனர். டிடிவி தினகரன், எடப்பாடி அணியினரிடையே ஏற்கனவே கடும் போட்டி நிலவுகிறது. திமுக அதிமுகவை வெற்றிப்பெற வேண்டும் என கடுமையாக போராடி வருகிறது.
 
இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியில் விஷால் களமிறங்கியுள்ளார். விஷாலில் இந்த முடிவு தமிழகத்தில் ஆர்.கே.நகர் மீதான் தேர்தல் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் எந்த செல்வாக்கும் இல்லாத ஒருவராக தற்போது களமிறங்கியுள்ளார்.