1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (18:15 IST)

ஜெய்பீம் விவகாரம்: பாமக எம்.பி. அன்புமணிக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

நடிகர் சூர்யாவை விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பாமக எம்பி அன்புமணி அவர்களுக்கு இயக்குனர் ஆர்கே செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார்
 
சூர்யா நடித்த ஜெய்பீம் விவகாரம் கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்த படம் குறித்து பாமக எம்பி அன்புமணி கடும் விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெப்சி தலைவர் மற்றும் இயக்குநர் ஆர்கே செல்வமணி அவர்கள் நடிகர் சூர்யாவை விமர்சனம் செய்வதை தவிருங்கள் என்று அன்புமணி எம்பிக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் சமூக நீதி காக்க உருவானதே ஜெய் பீம் திரைப்படம் என்றும் குறிப்பிட்ட ஒரு ஜாதியை அவமதிக்கும் நோக்கம் சூர்யாவுக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்றும் திரையில் படைப்புச் சுதந்திரமும் அரசியல் சுதந்திரம் முக்கியம் என்றும் தவறு நடந்தால் நட்பு ரீதியாக தீர்ப்பது ஆரோக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்