தொடர்புடைய செய்திகள்
- பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
- அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமை இயக்கம் – புறநோயாளிகள் சிகிச்சை நாளை முதல் நிறுத்தம்
- கர்நாடக அரசு நிராகரித்த சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கும் தமிழக அரசு?
- மேகதாது விவகாரம் கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை கிடையாது : தமிழக அரசு அதிரடி
- சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு புதிய அதிகாரி: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் இலவச சைக்கிளில் கர்நாடக அரசு சின்னம்: அதிர்ச்சி தகவல்
ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்ற்ன.
இந்த நிலையில் தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டத்தில் வழங்கப்பட்ட சைக்கிள்களில் கர்நாடக அரசு சின்னம் இடம்பெற்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் இதுகுறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சற்றுமுன் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில் தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டத்தில் வழங்கப்பட்ட சைக்கிள்களில் கர்நாடக அரசு சின்னம் இடம்பெற்றது எப்படி? என்றும், இலவச சைக்கிள் விஷயத்தில் கூட கவனமாக இருக்க மாட்டீர்களா? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தரமற்ற சைக்கிள்கள் என கர்நாடகா அரசு தூக்கி வீசிய இலவச சைக்கிள்களை, தமிழக அரசு வாங்கி மாணவர்களுக்கு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
