செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (14:05 IST)

கொரோனா தடுப்பு நிவாரண நிதி: சன் டிவி செய்த நிதியுதவி

கொரோனா தடுப்பு நிவாரண நிதி: சன் டிவி செய்த நிதியுதவி
இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு தொழில் அதிபர்கள், திரைப்பட நடிகர்கள் உள்பட பலர் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி குழுமம் தனது சார்பில் ரூபாய் 10 கோடி நிதி உதவி செய்துள்ளது. இதனை சன் டிவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது. மேலும் ரூ.10 கோடி மட்டுமின்றி சன் டிவி குழுமத்தில் பணிபுரியும் பணியாளர்கள் 6 ஆயிரம் பேர்களின் ஒரு நாள் ஊதியமும் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படுவதாக சன் டிவி குழுமம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே திமுக அறக்கட்டளை சார்ப்பில் ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சன் டிவி சார்பிலும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது