1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (12:09 IST)

முதன்முறையாக மருத்துவர் உயிரிழப்பு! சோகத்தில் மக்கள்!

இந்தியாவில் கொரோனாவுக்கு ஏற்கனவே மக்கள் பலியாகி வரும் நிலையில், முதன்முறையாக மருத்துவர் ஒருவர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல அதிகரித்து வருகின்றன.

மருத்துவர்கள், காவல்துறையினர் தங்கள் குடும்பங்களை மறந்து கொரோனா பாதித்தவர்களை மீட்கவும், கொரோனாவை கட்டுப்படுத்தவும் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் கொரோனா ஏற்படும் ஆபத்து உள்ளதால் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவர் இறந்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.