திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (13:20 IST)

குஜராத்திலிருந்து வந்த தப்லீக் ஜமாத் அமைப்பினர் – சென்னையில் கொரோனா பரிசோதனை!

குஜராத்திலிருந்து சென்னை வந்து மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட தப்லீக் ஜமாத் அமைப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத் பகுதியிலிருந்து 29 மதகுருமார்கள் சென்னைக்கு மதப்பிரச்சாரத்திற்காக வந்துள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு சென்று மதப்பிரச்சாரம் செய்து வந்த அவர்களில் 80 வயதான ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

உடனடியாக அவருடன் சென்னை வந்த அனைவரும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அவர்கள் சென்னையில் பிரச்சாரத்திற்கு சென்ற மசூதிகளில் பங்கேற்றவர்கள் குறித்தும் ட்ராக்கிங் செய்து பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.