1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 21 மே 2023 (00:05 IST)

கருர் கிளை நூலகத்தில் கோடை கால அடிப்படை கணினி பயிற்சி முகாம்

karur
கோடை கால அடிப்படை கணினி பயிற்சி முகாம் இனாம் கருர் கிளை நூலகத்தில் நடைபெற்றது.
 
இம்முகாமில்  இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் எம்.பவித்ரா வரவேற்றார். கணினி பயிற்றுநர் சே.ஐஸ்வர்யா,டி.சி.எஸ். சரண்யா ஆகியோர் இல்லம் தேடி கல்வி மைய மாணவர்கள்,வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி வழங்கினார்கள். எம்.எஸ். வேர்ட், பவர் பாயிண்ட், பெயிண்டிங்  பயிற்றுவிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் ஜீ மெயில் முகவரி புதிதாக துவங்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  டி.செல்வ பிரியா நன்றி கூறினார். நூலகர் ம. மோகன சுந்தரம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
 
கோடை முகாமில் தமிழ் வாசிப்பு பயிற்சியும்,தமிழ் நாப்பழக்க பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.