திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2017 (13:45 IST)

தினகரன் தரப்பிடம் தன்னை நீதிபதி என்று கூறிய சுகேஷ் - பகீர் தகவல்

இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி, தினகரன் தரப்பிடம் பணம் பெற்றதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்தர், தன்னை ஹைகோர்ட் நீதிபதி என்று கூறி ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


 

 
அதிமுக கட்சியின் இரட்டை இல்லை சின்னத்தை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா வாக்குமூலம் அளித்துள்ளார். ரூ.60 கோடி பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது.  
 
இதனால், டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேரில் ஆஜராக சம்மன் வழங்கினர். இதனால் கடந்த 22ம் தேதி டெல்லி சென்ற டெல்லி சென்ற தினகரனை, கடந்த 2 நாட்களாக சுமார் 10 மணிநேரம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவரிடமிருந்து சரியான தகவலை அவர்களால் பெறமுடியவில்லை எனத் தெரிகிறது. எனவே, இன்று மாலை 4 மணியளவில் மீண்டும் ஆஜராக வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர். 

 

 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், ஏற்கனவே பல மோசடிகளை செய்து சிறைக்கு சென்றவர். தினகரன் தரப்பிடம் தன்னை ஹைகோர்ட் நீதிபதி என பொய் சொல்லியிருக்கிறார். மேலும், எனக்கு தேர்தல் கமிஷனில் நிறைய பேரை தெரியும். என்னால் உங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தர முடியும் எனக்கூறி, ரூ.50 கோடிக்கும் மேல் பேரம் பேசியுள்ளார். எனவே, அவரை நீதிபதி என நம்பியே, தினகரன் தரப்பு அவரிடம் முன்பணமாக ரூ.1.30 கோடியை கொடுத்துள்ளது என்ற தகவல் விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.