திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:07 IST)

புதிய பாதையில் அண்ணாசாலை - சென்ட்ரல் பேருந்துகள்.. என்ன காரணம்?

Chennai Bus
சென்னை அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் போகும் பேருந்துகள் புதிய பாதையில் செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையேயிலான மின்சார ரயில்  நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தற்போது சிந்தாதிரிப்பேட்டைக்கு அதிக பேருந்துகள் செல்லும் வகையில் சில பாதைகளை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குறிப்பாக சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை வழியாக செல்லும் வழியில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
அது மட்டும் இன்றி சிந்தாதிரிப்பேட்டை வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பையும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva