1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (14:40 IST)

மஞ்சள் நிற பேருந்துகளில் உள்ள சிறப்புகள் என்னென்ன?

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் இன்று முதல் மஞ்சள் நிறமாக்கப்பட்டுள்ள நிலையில் புதிய மஞ்சள் நிற பேருந்துகளில் உள்ள வசதிகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளன. 
 
இந்த பேருந்தில் பயணிகள் அமர்வதற்கு 52 இருக்கைகள் உள்ளன. மேலும் செல் போன் சார்ஜ் போடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வயதானவர்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகள் ஏறும் வகையில் படிக்கட்டு அனைத்து பேருந்துகளிலும் பொருத்தப்பட்டுள்ளேன்  
 
மேலும் புதிய மஞ்சள் நிற பேருந்துகள் அனைத்திலும்  டிஜிட்டல் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மஞ்சள் நிற பேருந்துகள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran