1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2025 (11:31 IST)

சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. குளிர்ச்சியான தட்பவெப்பம்..!

சென்னையில் கடந்த சில நாட்களாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் வெயில் கொளுத்தியது என்பதும், சில பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பம் பதிவான நிலையில், சற்றுமுன் திடீரென சென்னையில் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னையில் கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வேப்பேரி, ஓட்டேரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதைப் போல் தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம், பாண்டி பஜார்,  நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதாக தகவல் வழியாக உள்ளன.
 
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீர் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி உள்ளது என்றும், இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் தெரிகிறது.
 
அதுமட்டுமின்றி, திடீரென பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்க அறிவுறுத்தப்படுகிறது என்றனர்.
 
கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், வேப்பேரி, அண்ணா சாலை, மெரினா, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர், நந்தனம், மாம்பலம், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதாகவும், எனவே இந்த பகுதியில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
Edited by Siva