வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (18:55 IST)

7 தமிழர்களை விடுதலை செய்ய கூடாது: ஜனாதிபதிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

ராஜீவ்காந்தி கொலையாளிகளான 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு நான் கடிதம் அனுப்புகிறேன் என சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் 
 
இந்த கடிதத்தை ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என்றும் ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் இவர்கள் தண்டிக்கப் பட்டனர் என்றும் ராஜீவ்காந்தி மட்டுமல்லாது இந்த குண்டுவெடிப்பில் மேலும் 18 காவல்துறையினர் உயிரிழந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ் காந்தி குடும்பம் மட்டுமே குற்றவாளிகளை மன்னித்தால் போதாது என்றும் 18 குடும்பத்தினர்களும் மன்னித்தால் மட்டுமே விடுதலை செய்ய வாய்ப்பு என்றும் சுப்பிரமணி சாமி தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது