1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (10:16 IST)

மு.க.ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வந்தால் மகிழ்வேன்: முக அழகிரி பேட்டி

மு.க.ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வந்தால் மகிழ்வேன்: முக அழகிரி பேட்டி
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வில் ஈடுபட உள்ள நிலையில் தனது இல்லத்துக்கு அவர் வந்தால் மகிழ்வேன் என முக அழகிரி பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று ஈரோடு சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின் இன்று அவர் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்கிறார். இந்த நிலையில் மதுரையில் இருக்கும் முக ஸ்டாலின் அவர்களின் சகோதரர் முக அழகிரி அவர்கள் இன்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
அந்த பேட்டியில் அவர் முக ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வந்தால் மகிழ்வேன் என்று தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள முதல்வர், டிவிஎஸ் நகரில் உள்ள முக அழகிரி இல்லத்திற்கு செல்வதாக ஏற்கனவே தகவல் வெளிவந்துள்ள நிலையில் முக அழகிரியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றவுடன் முக அழகிரி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.