1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (17:20 IST)

நான் வந்தால் சாக்கடையில் ஒளியும் பொறுக்கிகள் போன பின்பு குரைக்கிறார்கள்: கொக்கரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

நான் வந்தால் சாக்கடையில் ஒளியும் பொறுக்கிகள் போன பின்பு குரைக்கிறார்கள்: கொக்கரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

சமீப காலமாக சுப்பிரமணியன் சுவாமியின் பொறுக்கி புகழ் வசை பாடுதல் அதிகமாகவே இருக்கிறது. தேசிய கட்சியின் மூத்த தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் அவர் வார்த்தை கட்டுப்பாடு இல்லாமல் தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார்.


 
 
தன்னை எதிர்ப்பவர்களை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி அதற்கு பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் நாகரீகமற்றதாக இருப்பதை கண்டுகொள்வதே இல்லை. பொறுக்கி, எலி, நக்சல், தேச விரோதி, முட்டாள், முதுகெலும்பில்லாதவன், படிப்பறிவு இல்லாதவன் என வெறுக்கத்தக்க வார்த்தைகளை உபயோகிக்கிறார்.
 
சமீப காலமாக தமிழர்களை அவர் அதிகமாக பொறுக்கிகள் என்று குறிப்பிடுகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவர் தமிழ் இளைஞர்களால் அதிகமாக வசைபாடப்படுகிறார். தமிழகம் வந்தால் சுப்பிரமணியன் சுவாமிக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என ஆவேசமாக இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

 
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நான் பொறுக்கிகளை சந்திக்க தமிழகத்திற்கு 1997, 1991, 1994-96 மற்றும் 11/2/17 ஆகிய காலகட்டத்தில் வந்திருக்கிறேன். அப்போது என்னிடம் கருணை பிச்சை கேட்பதும் அல்லது சாக்கடையில் ஓடி ஒளிவதுமாக இருப்பார்கள். ஆனால் நான் சென்ற பின்னர் குரைப்பார்கள் என கூறியுள்ளார்.