வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 அக்டோபர் 2021 (15:05 IST)

தமிழக அரசின் கண்காணிப்புக் குழு தலைவராக சுப வீரபாண்டியன்!

தமிழக அரசு அமைத்துள்ள சமூகநீதி கண்காணிப்புக் குழுவுக்கு தலைவராக சுப வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘’சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் “சமூகநீதிக் கண்காணிப்பு குழ“ அமைக்கப்படும். இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும்.

இந்த பணிகளை மேற்கொள்வாடு இவை சரியாக நடைமுறைப் படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள்’ என அறிவித்திருந்தார். இந்த குழுவுக்கு தலைவராக சுப வீரபாண்டியனும், உறுப்பினர்களில் ஒருவராக கவிஞர் மனுஷ்யபுத்திரனும் இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.