ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:09 IST)

அறநிலையத்துறை கல்லூரிகளிலிருந்து இந்துகளுக்கு மட்டுமே பணி: தமிழக அரசு

அறநிலையத்துறை சார்பில் இயக்கப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாளர்களாக நியமிக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
 
சென்னை கபாலீஸ்வரர் கோயிலின் சார்பில் செயல்படும் கல்லூரியில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே பணி நியமனம் செய்ய முடிவெடுத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது
 
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்லூரிகளில் இந்துக்களை மட்டுமே பணியாளர்களாக சேர்க்க முடியும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது