திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:29 IST)

ஓடும் பைக்கில் ஸ்டண்ட்...தவறி விழுந்த புள்ளிங்கோ....

stunt
இளைஞர்கள் பொது இடங்கள், சாலைகள் என பார்க்கும் இடமெல்லாம், பைக் ரேஷிலும், ஸ்டண்டுகளிலும் ஈடுபடுகின்றனர்.

இது பொதுமக்களுக்குப் பல இடைஞ்சல்களையும் அபாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து,  போலீஸார் பல முறை எச்சரித்து வருகின்றனர். ஆனால், இளைஞர்கள்   இதை சீரியஸாக எடுக்காமல் தொடர்ந்து இம்மாதிரி பின்விளைவுகளை அறியாமல் ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

சமீபத்தில், டிடிஎஃப் வாசன், ஜிபி முத்துவை தன் பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றபோது, கையைவிட்டு விடு ஓட்டியதுடன் வேகமாகவும் சென்றார். இது சர்ச்சை ஆனது.

இதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு பிரதான சாலையில் ஒரு இளைஞர் சாகசம் செய்வதாக  நினைத்துக் கொண்டு, ஓடும் பைக்கில் கையை விட்டுவிட்டு, வேகமாகச் செல்லும்போது, அதன் மீது ஏறி  நின்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு முதுகில் பலத்தை அடி விழுந்து, கதறி எழுதார்.  இந்த வீடியோ வைரலாகி வருகிறது.