வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (21:35 IST)

கரூர் அருகே தமிழக வேளாண்மைத்துறையின் அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு

கரும்பு விவசாயிகள்  கரும்பு பயிர் சாகுபடி செய்வதற்கு சொட்டு நீர் பாசனத்திற்காக கூடுதல் மானியமாக  ரூ 45  ஆயிரம்  சேர்த்து  1  லட்சத்து  50  ஆயிரம்  வழங்கப்படும் என்றும்  கரூர் ஈஜடி  பாரி சர்க்கரை  ஆலையின்  கரும்பு  ஆராய்ச்சி  நிலையத்தை  பார்வையிட்ட பின்னர் தமிழக  வேளாண்மைத்துறையின் அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு செய்த பின்னர் பேட்டியளித்துள்ளார்.
 

கரூர் அடுத்த  புகளூரில்  உள்ள  ஈஜடி  சர்க்கரை  ஆலையின்  கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை  இன்று தமிழக வேளாண்மைத்துறையின் அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி  ஆய்வு  மேற்கொண்டார், அங்கு பயிரிடப்பட்டு  வரும்  கரும்பு சாகுபடியினை  பார்வையிட்டு பின்னர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், கூறியதாவது :

கரும்பு  பயிரில்  11015 என்கின்ற  புதிய  ரகத்தை  அறிமுக படுத்தி உள்ளோம்  என்றும், இதில் அதிக  மகசூல்  தரும் , உற்பத்தி திறன்  அதிகம் கிடைக்கும் என்பதினால்  விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள  வேண்டும்., தற்போது  தமிழக முதல்வரின்  உத்தரவு படி கரும்பு விவசாயிகள்  கரும்பு  சாகுபடி  செய்வதற்கு சொட்டு நீர் பாசனத்திற்கு  கூடுதல்  மானியமாக ஒரு  ஏக்கருக்கு  45  ஆயிரம் சேர்த்து  மொத்தம் ரூ 1 லட்சத்து 50 ஆயிரம்  தமிழக அரசால் வழங்கப்படுகிறது  என்றும், இதனை  கரும்பு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார். இந்த ஆய்வின் போதும், பேட்டியின் போதும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உடனிருந்தார்.