வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (17:53 IST)

என் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது - மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் முடிந்துள்ள நிலையில் 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெறள்ளது. இதனால் அங்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தாபானர்ஜி , பாஜக மற்றும் காங்கிரஸ் அரசை மிகக்கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இன்று மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தாபானர்ஜி தனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று தனது தேர்தல் பிரசாரத்தில் அவர் கூறியுள்ளதாவது:

மத்தியில் ஆளும் பாஜக திரிணாமுல் காங்கிரஸின் திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுக்கிறது. பாஜக தலைவர்கள் எங்களின் அன்றாட உரையாடலை ஒட்டுக்கேட்கிறார்கள்..அவர்கள் சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகளில் எங்கள் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்கிறார்கள் எனத் தெரிகிறது. இதுகுறித்த விவகாரத்தில் நான் சிபிசி விவகாரத்தில் விடுவேன். இதன் பின்னணியில் பாஜக உள்ளது தெளிவாகிறது எனக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.