வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (15:09 IST)

ஊரடங்கை மீறி மாணவிகளுக்குத் தேர்வு….

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள பள்ளியில் விடைத்தாள் மாயமானதால் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போச்சம்பள்ளி அடுத்துள்ள மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 15ற்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளிக்கு  அருகேயுள்ள டியூசன் செண்டரில் ஆசிரியர் முன்னிலையில் மீண்டும் தேர்வு எழுதியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 10 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால், ஊரடங்கை மீறி மாணவிகளை பள்ளிக்கு அழைத்த ஆசிரியர்கள் அவர்களை தேர்வு எழுதவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.