வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2019 (10:43 IST)

மாணவர்கள் பேராசிரியர்களின் வீடுகளுக்கு செல்லகூடாது: பல்கலைகழகம் சுற்றறிக்கை

மாணவர்களை தங்களது வீடுகளுக்கு பேராசிரியர்கள் அழைக்ககூடாது என சென்னை பல்கலைகழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பல்கலைகழகத்தின் பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்தால் மாணவ, மாணவியர்கள் அங்கு செல்லக்கூடாது என சென்னை பல்கலைகழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ஒரு வேளை பேராசிரியர்களின் வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டால் மாணவர்கள் நிர்வாகத்திடம் உரிய அனுமதி கோர வேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேலும் அந்த சுற்றறிக்கையில் பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாக மாற்றும் முயற்சி இது எனவும் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் தரப்பிலோ, பேராசிரியர்கள் தரப்பிலோ, தவறு இழைக்கப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைகழகத்தில் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.