1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (09:38 IST)

சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

கனமழை காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் மழையின் அளவிற்கு ஏற்ப ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளதை அடுத்தும், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ததை அடுத்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran