திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2018 (15:59 IST)

ஆபாச படம் பார்க்க மறுத்த மாணவனுக்கு கத்திகுத்து!

செல்போனில் ஆபாசம் படம் பார்க்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவனை டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(37) டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவரை தன்  வீட்டுக்கு அழைத்து சென்றார். வீட்டுக்கு சென்றவுடன் மாணவரை ஆபாச படம் பார்க்குமாறு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மாணவன் மறுத்ததால் கோவத்தில் கருப்பச்சாமி கத்தியால் குத்தியுள்ளார்.
 
இதனால் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் கருப்பசாமிக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளனர்.