திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 12 ஜூன் 2017 (21:56 IST)

சக மாணவர்கள் முன் அவமானப்படுத்திய ஆசிரியர்; தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்

ஓமலூர் அருகே சக மாணவர்கள் முன் ஆசிரியர் அவமானப்படுத்தியதால் நந்தகுமார் என்ற மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சேலம் மாங்காட்டில் உள்ள அரசுப் பள்ளியில் நந்தகுமார் என்ற மாணவன் 9ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியதும் 10ஆம் வகுப்பில் கடந்த 2 நாட்களாக அமர்ந்திருக்கிறார். 
 
அப்போது ஆசிரியர்கள் சிலர் நந்தகுமாரை அழைத்து மற்ற மாணவர்களிடம், நந்தகுமார் தோல்வி அடைந்த மாணவர் என்றும், அவரைப் போல இருந்தால் உங்களையும் தேர்வில் ஃபெயில்  ஆக்கிவிடுவோம் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது.
 
இதில் மனமுடைந்த நந்தகுமார் தற்கொலை செய்யும் எண்ணத்தில் விஷம் அருந்தியுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நந்தக்குமார் மரணத்துக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.