திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

மறுபிரேத பரிசோதனை முடிவு: மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு கோரிக்கை

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்
 
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. 
 
இந்த நிலையில் நேற்று மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடலை பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினர் மாணவியின் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
 
இதனையடுத்து இன்று மாணவியின் பெற்றோர் உடலை பெற்று உடல்தகனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.