1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (12:53 IST)

வலுக்கும் போராட்டம்: ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு

தமிழகத்தில் ஆளுநருக்கு எதிராக போராட்டம் வலுத்து வருவதால் ராஜ் பவனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்து வந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர், மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
 
அந்நிலையில், தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது, ஆளுநர் அண்ணா பலகலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தார். தற்போது பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அவரது பெயர் அடிப்பட்டத்தால் அவருக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமானது.
 
இதற்கிடையே, எதிர்கட்சியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர். இதனால் அளுநர் மாளிகைக்கு 4 துனை ஆணையர் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.