1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (19:12 IST)

என்.எல்.சி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் தங்கம் தென்னரசு

kaladur
நெய்வெலியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததிற்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்..

கடலூரில் நடைபெற்று வரும் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை  கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் இன்று நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. 

ஒருசில பாமகவினர்  உள்ளே செல்ல முயன்றபோது, போலீசின்  தடுப்பை மீறி முன்னேறிச் செல்ல முயன்றபோது, போலீசாருக்கும் பாமகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது.

பாமகவினரின் முற்றுகைப் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர், கண்ணீர் புகைகுண்டுகளும் வீசப்பட்டன. இந்த இடம் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதாக தகவல் வெளியாகும்  நிலையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் கடலூர், நெய்வேலிக்கு  நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார்.

இந்த  நிலையில், என்எல்சிக்கு  நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நெய்வெலியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  ’’போராட்ட களத்தை அரசியல் கட்சிகள் வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு அறவழியில் போராடுவதற்குத்தான்  அனுமதி வழங்கியது’’ என்று கூறியுள்ளார்.