புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (23:01 IST)

பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரவக்குறிச்சியில் தெருமுனை கூட்டங்கள்

bjp
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் திரு ஜவஹர்லால் அவர்கள் தலைமையில் ஆண்டிப்பட்டி கோட்டை மற்றும் பள்ளப்பட்டி அருகே அண்ணாநகர்,மண்மாரி ஆகிய பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது.

இதில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு V.V. செந்தில்நாதன் அவர்கள் கலந்துகொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து, மத்திய அரசின் தொழிலாளர் நல வாரிய அட்டைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் திரு N.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.  
 
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட பொதுச் செயலாளர் திரு ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன் , ஒன்றிய பொதுச்செயலாளர் மணி பொருளாளர் K.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலகுரு, முனுசாமி,ஒன்றிய துணை தலைவர்கள் மனோகரன், வேல்முருகன் உட்பட பாஜக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.